New Activity
Play Froggy Jumps
1. உராய்வு என்றால் என்ன?
A
இரண்டு மேற்பரப்புகள் ஒன்றோடு ஒன்று உரசும் பொழுது ஏற்படும் விசை
B
இழுத்தல் மற்றும் தள்ளுதல் உந்து விசை
C
நடவடிக்கையின் காரணத்தினால் ஏற்படும் ஒருவகை விசை
2. உராய்வு உந்து விசையைப் பற்றியச் சரியான கூற்றைத் தெரிவு செய்க.
A
நகரும் பொருளின் எதிர் திசையில் இயங்குகிறது.
B
நகரும் பொருளின் அதே திசையில் இயங்குகிறது.
C
நகரும் பொருளின் திசையை மாற்றுகிறது.
3. சொரசொரப்பான மேற்பரப்பில் உராய்வு __________________________ காணப்படும்.
A
அதிகமாக
B
குறைவாக
C
சமமாக
4. வழவழப்பான மேற்பரப்பில் உராய்வு __________________________ காணப்படும்.
A
குறைவாக
B
அதிகமாக
C
சமமாக
5. இவற்றுள் எது உராய்வை அதிகரிக்கும் நடவடிக்கையாகும்?
A
கழிப்பறையில் சொரசொரப்பான கால்மிதியைப் பயன்படுத்துதல்
B
கேரம் பலகையை வழவழப்பாக்க முகப்பூச்சு இடுதல்
C
மிதிவண்டியின் சங்கிலிக்கு மசுகு எண்ணெய் விடுதல்
6. இவற்றுள் எது உராய்வை குறைக்கும் நடவடிக்கையாகும்?
A
கனமான பெட்டியை நகர்த்த உருளைகளைப் பயன்படுத்துதல்.
B
போத்தலின் மூடியைத் திறக்க துணியைப் பயன்படுத்துதல்
C
வாகன வட்டையத்தில் பூ வேலைப்பாடுகள் இருத்தல்.
7. போட்டி விளையாட்டுகளுக்காக பயன்படுத்தப்படும் காலணிகளின் அடிப்பாகம் சொரசொரப்பாக இருக்கும். காரணம்
A
உராய்வை குறைக்க
B
உராய்வை அதிகரிக்க
C
எடையை அதிகரிக்க
8. வட்டயத்தில் காணப்படும் பூ வேலைப்பாட்டின் பயன் என்ன?
A
சாலையில் வாகனம் வழுக்காமல் இருக்க உதவும்.
B
வட்டையம் அதிக நாள் தாங்கும்
C
வட்டயம் அழகாகக் காட்சியளிக்கும்.